விளையாட்டு

நேற்று தோல்வியோட மட்டும் போகல.. மோசமான சாதனை ஒன்றை படைத்த கோலி..! என்ன தெரியுமா..?

Summary:

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நேற்றைய T20 போட்டி மூலம் இந்திய அணியின் கே

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நேற்றைய T20 போட்டி மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் T20 போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கை தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 67 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. 125 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 130 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 49 ரன்கள் அடித்தார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக்கவுட் ஆனார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக கோலி 14 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் கேப்டன் கங்குலி 13 முறையும், தோனி 11 முறையும், கபில்தேவ் 10 முறையும், முகமது அசாருதீன் 8 முறையும் டக் அவுட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement