விளையாட்டு

தாறுமாறாக ஆடிய மேக்ஸ்வேல்.! ஓடிவந்து விராட் கோலி கொடுத்த டிப்ஸ்.! அடுத்த பந்தில் டமால் டுமீல்..! வைரல் வீடியோ

Summary:

தாறுமாறாக ஆடிய மேக்ஸ்வேல்.! ஓடிவந்து விராட் கோலி கொடுத்த டிப்ஸ்.! அடுத்த பந்தில் டமால் டுமீல்..! வைரல் வீடியோ

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் துபாயில் நேற்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் , ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சஹார் ஓவரில், ரிவர்ஸ் சுவிப் செய்து பவுண்டரி பறக்கவிட்டார். இதனையடுத்து உடனடியாக அருகே வந்த விராட் கோலி, அவருக்கு சில அறிவுரைகளை கூறினார். இதனையடுத்து  ராகுல் சஹார் ஓவரில் மேக்ஸ்வேல் போல்டாகி வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement