நேற்றைய ஆட்டத்தில் தல தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி.!

நேற்றைய ஆட்டத்தில் தல தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி.!


virat beat MS Dhoni record

2020 ஐ.பி.எல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.

virat

நேற்றைய ஆட்டம் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடிய 200-வது ஆட்டமாகும்.  20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 200 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றுள்ளார். இந்த வகையில் 2-வது இடத்தில் சோமர்செட் அணிக்காக ஆடிய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஹில்ட்ரெத் (196 ஆட்டம்), 3-வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் தோனி(192 ஆட்டம்) ஆகியோர் உள்ளனர்.

அதேபோல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை தோனி தக்கவைத்திருந்தார். அவர் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடி 4,225 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை கோலி நேற்று 10 ரன்கள் எடுத்த போது முறியடித்தார்.