தல தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி! அதிரடி சாதனையால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி!

தல தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி! அதிரடி சாதனையால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி!


virat beat ms dhoni record


இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டி‌கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 286 ரன்களை எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் ஒரு நாள் போட்டிகளில் 9 ஆவது சதத்தை அடித்து 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  இந்திய அணியின் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

virat

287 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, ராகுல் இணை 69 ரன்களைச் சேர்த்தது. ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கோலி 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 47.3 ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற்றது. 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சதமடித்த ரோகித் சர்மாவிற்கு ஆட்ட நாயகன் விருதும், கேப்டன் விராட் கோலிக்கு தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

virat

இந்த தொடரில், மூன்று போட்டிகளில் முறையே 16, 78, 89 ரன்கள் என மொத்தமாக 183 குவித்தார் விராட் கோலி. மேலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி‌களில், அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற பெருமையை இந்தத் தொடரில் அவர் பெற்றுள்ளார். 

இந்திய முன்னாள் கேப்டன் தோனி, கேப்டனாக 127 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை கடந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது. இந்தநிலையில் கேப்டனாக களம் கண்ட 82 இன்னிங்ஸ்‌களில்‌ 5 ஆயிரம் ரன்களை கடந்து கோலி  தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.