விளையாட்டு

வீட்டிற்கு வெளியே கோலியும் அனுஷ்காவும் செய்த காரியம்! அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோ!

Summary:

virat and anushka playing cricket outside

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டிலே இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பிரபல பாலிவுட் நடிகையான அணுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலும் விராட் கிரிக்கெட் விளையாட வெளியில் செல்வதும் அவரது மனைவி அனுஷ்கா ஷூட்டிங்கிற்காக வெளியில் செல்வதும் என எப்போதும் பிஸியாக இருப்பார்கள்.

Virat Kohli, Anushka Sharma Urge People to Stay Indoors During 21 ...

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் இருவரும் நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவ்வப்போது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது அவர்கள் இருவரும் வீட்டிற்கு வெளியே கிரிக்கெட் விளையாடும் காட்சியினை பக்கத்து வீட்டின் மாடியில் இருந்து எடுத்த நபர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். முதலில் அனுஷ்கா பேட்டிங் பிடிக்க பின்னர் கோலி பேட்டிங் செய்கிறார். இருவரும் மாறி மாறி பந்து வீசுகின்றனர்.


Advertisement