இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் மாரியப்பன்.! டிடிவி தினகரன் வாழ்த்து.!

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் மாரியப்பன்.! டிடிவி தினகரன் வாழ்த்து.!


ttv dhinakaran wishes to mariyappan

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டித்தொடரில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.  டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தை சார்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனைப்போன்று, பீகார் மாநிலத்தை சார்ந்த வீரர் சரத்குமார் வெண்கல பதக்கத்தை வென்றார். அமெரிக்க வீரர் ஷாம் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். இறுதியில் அமெரிக்க வீரர் ஷாமுக்கும், இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கும் இடையே பல முறை போட்டி நடைபெற்று மாரியப்பனுக்கு வெள்ளியும், ஷாமுக்கு தங்கமும் கிடைத்தது. 

இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழக வீரர் மாரியப்பனுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், "பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிற தமிழகத்தைச்  சேர்ந்த வீரர் திரு.மாரியப்பன் அவர்களைப்  பாராட்டி மகிழ்கிறேன். தொடர் பயிற்சிகளின் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் அவர் இன்னும் பல சிறப்புகளைப் பெற வாழ்த்துகிறேன்." என தெரிவித்துள்ளார்.