விளையாட்டு

ஒருவேள அது நடந்துருமோ!! இந்த சீசனுடன் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ள 3 டாப் வீரர்கள்!!

Summary:

வரவிருக்கும் ஐபில் தொடர் முடிந்த பிறகு மூன்று பிரபல வீரர்கள் ஐபில் தொடரில் இருந்து ஓய்வு ப

வரவிருக்கும் ஐபில் தொடர் முடிந்த பிறகு மூன்று பிரபல வீரர்கள் ஐபில் தொடரில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 10 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் அனைத்து அணிகளுமே இந்த முறை கோப்பையை வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

இதுஒருபுரம் இருக்க, இந்த ஆண்டு ஐபில் தொடருக்கு பிறகு மூன்று பிரபல வீரர்கள் ஐபில் தொடரில் இருந்து தங்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

3 . ஹர்பஜன் சிங்:
கடந்த முறை சென்னை அணியில் இருந்து விலகிய ஹர்பஜன் சிங் இந்த முறை கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார். ஏற்கனவே சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார் இந்த சீசனுடன் ஐபில் இல் இருந்து தனது ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 . இம்ரான் தாஹிர்:
தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான இம்ரான் தாஹிர் ஐபில் தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இதற்கு முன் நடந்த பல்வேறு சீசன்களில் சென்னை அணி அடுத்தடுத்த சுற்றுக்கு செல்ல இம்ரான் தாஹிரின் சிறப்பான ஒரு பந்து வீச்சும் காரணமாக அமைந்தது.

ஆனால் கடந்த சீசனில் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த சீசனில் சென்னை அணி இம்ரான் தாஹிரை அணியில் இருந்தும் விடுவித்துள்ளது. மேலும் அவரது வயதும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது 42 வயதாகும் இம்ரான் தாஹிர் இனிவரும் வரும் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பது என்பது சந்தேகமே. அதனால் அவரும் இந்த சீசனுடன் தனது ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

1 . மகேந்திரசிங் தோனி:
இந்த பெயர் சென்னை அணி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ஐபில் ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். காரணம் தோனி விளையாடுவதை பார்ப்பதற்காகவே ஐபில் போட்டிகளை பார்ப்பவர்கள் ஏராளம். ஆனால் வரவிருக்கும் ஐபில் சீசனோடு தோனி தனது ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபில் சீசனில் சென்னை அணி மோசமான தோல்விகளை தழுவியது. மேலும் தோனியின் கேப்டன்சி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அதுபோக கடந்த சீசனிலையே தோனி தனது ஓய்வை அறிவிக்க போகிறார் என்றுகூட பேச்சுக்கள் எழுந்தது.

ஆனால் கடைசி லீக் போட்டியில் பேசிய தோனி, தான் நிச்சயம் அடுத்த சீசனில் விளையாடுவேன் என கூறினார். இதனால் தோனி ஓய்வு குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தது. ஆனால் இந்த முறை என்ன நடக்க போகிறது? சென்னை அணி கோப்பையை கைப்பற்றுமா? தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா என்பது எல்லாம் இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

ஏற்கனவே அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்ட தல தோனி, இந்த சீசனுடன் ஐபில் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றே கூறப்படுகிறது. ஒருவேளை தோனி ஓய்வை அறிவித்துவிடுவாரோ? பொறுத்திருந்து பார்ப்போம் ...


Advertisement