கிரிக்கெட்டில் முக்கிய விதியை கண்டுபிடித்தவர் மரணம்! இரங்கல் தெரிவிக்கும் கிரிக்கெட் வாரியம்!

கிரிக்கெட்டில் முக்கிய விதியை கண்டுபிடித்தவர் மரணம்! இரங்கல் தெரிவிக்கும் கிரிக்கெட் வாரியம்!


Tony Lewis died

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்படும்பட்சத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். சிக்கலான இந்த வெற்றி இலக்கு கணக்கீட்டு முறையை கணிதவியல் நிபுணர்கள் பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். 

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் மழையால் பாதிக்கப்பட்டால் ‘ரிசர்வ் டே’ என அழைக்கப்படும் அடுத்த நாள் போட்டி தொடர்ந்து நடைபெறும். இதனால் நேரம் வீணாகுவதோடு ரசிகர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு முதல் அணி எத்தனை ஓவர்கள் விளையாடுகிறது. எவ்வளவு ரன்கள் அடித்துள்ளது. எவ்வளவு விக்கெட்டுக்களை இழந்தது என்பதை கணக்கில் கொண்டு சேஸிங் அணிக்கு எவ்வளவு ரன்கள் இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கான பார்முலாவை இவர்கள் உருவாக்கினர்.

2014-ம் ஆண்டில் கணிதவியலாளர் ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பவரால் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்த விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78 ஆகும். அவரது மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.