மீண்டும் சாதனை படைக்க ஆசைப்பட்டு, கோட்டை விட்ட யுவராஜ்! சோகத்தில் ரசிகர்கள்!

மீண்டும் சாதனை படைக்க ஆசைப்பட்டு, கோட்டை விட்ட யுவராஜ்! சோகத்தில் ரசிகர்கள்!



today unluckey for uvaraj


ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஆரம்பித்து இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவரும் இந்த போட்டியானது தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது.

ஐபில் போட்டியின் 12 வது சீஸனின் ஏழாவது போட்டி இன்று மும்பை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

uvaraj

இதனையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களான டீகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். டீகாக் 20 பந்துகளில் 23 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 

அடுத்ததாக களமிறங்கிய யுவராஜ் சிங் சாகலின் ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். அவரின் நான்காவது பந்திலும் சிக்ஸர் அடிக்க முயற்சித்த யுவராஜ் துரதிஷ்டவசமாக அவுட் ஆகி வெளியேறினார். யுவராஜ் 12 பந்துகளில் 23  ரன்கள் எடுத்து ரசிகர்களை உற்சாக படுத்தினார். இந்தநிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.