டென்னிஸ் சாம்பியனுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்; பயணத்தின் நடுவே இன்ப அதிர்ச்சி.!

டென்னிஸ் சாம்பியனுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்; பயணத்தின் நடுவே இன்ப அதிர்ச்சி.!


tn-cm-mk-stalin-trajedy-meet-with-tennis-player-djokern

 

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்த பயணத்தில் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் தலைவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். 

இதன் வாயிலாக தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் புதிதாக கிடைக்கும். முதலீடுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அது சார்ந்த நிறுவனங்களின் பணிகள் தொடங்கும் என்பதால் வேலைவாய்ப்பும் அதிகமாகும். 

இந்நிலையில், முதல்வரின் ஸ்பெயின் பயணத்தின் நடுவே, டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவானாக கருதப்படும் நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் நோக்கி விமானம் பயணம் மேற்கொண்டார். 

அச்சமயம் இவர்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.