விளையாட்டு

இதே நாளில் 23 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்த உலக சாதனை.. முறியடிப்பது யார்?

Summary:

The unbeaten test record 952 by srilanka

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் சாதனைகளில் 23 ஆண்டுகளாக முறியடிக்கபடாமல் இருப்பது ஒரே இன்னிங்ஸில் இலங்கை அணியால் அடிக்கப்பட்ட 952 ரன்கள் தான்.

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் 6 ஆம் தேதி வரை இலங்கையின் கொலம்போவில் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. வரலாற்று ச3றப்பு வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 167 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 537 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சித்து, சச்சின், அசாருதீன் ஆகியோர் சதம் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் நங்கூரமாக நின்று விளையாடினர். ஜெய்சூர்யா 340, மகனமா 225, டி சில்வா 126 ரன்கள் விளாச இலங்கை அணி 271 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 952 ரன்கள் எடுத்தது. இதுதான் தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

இதற்கு முன்னதாக 1938 ஆம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எடுத்த 903/7d ரன்களே அதிகபட்சமாக இருந்தது. 59 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அணி அந்த சாதனையை முறியடித்த நாள் இன்று. 23 ஆண்டுகளாக முறியடிக்கபடாமல் இருக்கும் இலங்கை அணியின் சாதனையை யார் முறியடிபார்கள்?


Advertisement