தோல்விக்கான காரணம்; அன்று முகமது ஷமி, இன்று நீ: ட்விட்டரில் சிக்கி சின்னாபின்னமாகும் சிங்..!

தோல்விக்கான காரணம்; அன்று முகமது ஷமி, இன்று நீ: ட்விட்டரில் சிக்கி சின்னாபின்னமாகும் சிங்..!


The reason for failure was Mohammed Shami then, Arshdeep Singh on Twitter today

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவரும் 15 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் டி-20 போட்டி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 18வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது ஆடிய ஆசிஃப் அலி பந்தை தூக்கி அடித்தார். அந்தப் பந்தை அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டு தவறவிட்டார். அந்தக் கேட்சை அவர் தவறவிட்டது ஆட்டத்தின் முக்கிய திருப்பமாக அமைந்தது. ஏன்னெனில் அதற்கு அடுத்த புவனேஸ்வர் குமார் ஓவரில் ஆசிஃப் அலி 19 ரன்கள் விளாசி பாகிஸ்தான் அணியின் வெற்றியை கிட்டதட்ட உறுதி செய்தார்.

இந்த நிலையில், நேற்று அர்ஷ்தீப் சிங் கேட்சை தவறவிட்டது தொடர்பாக ட்விட்டரில் பலரும் அவரை வறுத்து எடுத்துள்ளனர். 2021ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து பலரும் ட்விட்டரில் மோசமான கருத்துகளை தெரிவித்து வந்தனர். அந்தவகையில் தற்போது மீண்டும் அர்ஷ்தீப் சிங் தொடர்பாக இவ்வாறு கருத்து தெரிவித்து வருவது சர்ச்சையாகியுள்ளது