தோனி சென்னை அணிக்கு வர சச்சின் தான் காரணமா..! 2008ல் நடைபெற்ற அதிரவைக்கும் பின்னணி

தோனி சென்னை அணிக்கு வர சச்சின் தான் காரணமா..! 2008ல் நடைபெற்ற அதிரவைக்கும் பின்னணி



The reason behind dhoni came for csk

2008 ஆம் ஆண்டில் முதல்முறையாக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் தோனியை எடுக்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை அணிக்கும் கடும் போட்டி நிலவியுள்ளது. ஆனால் சச்சினை மும்பை அணி ஏற்கனவே எடுத்திருந்த காரணத்தால் தோனியை மும்பை இழக்க நேரிட்டதும் சென்னைக்கு லக் அடித்தது.

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ஒவ்வொரு அணியும் உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பாவான்களை ஏலத்தில் விடாமல் தக்க வைக்கலாம் என்ற விதி இருந்தது. அதிக தொகைக்கு எடுக்கும் வீரரை விட 15 சதவிகிதம் அதிகமாக அந்த ஜாம்பாவானுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸிற்கு சச்சின், கொல்கத்தாவிற்கு கங்குலி, டிராவிட் கர்நாடகா, யுவராஜ் பஞ்சாப் என தேர்வாகினர். தோனிக்கு சொந்த மாநில அணி இல்லை, சென்னைக்கு ஜாம்பாவான் இல்லை. இதனால் தோனியை கைப்பற்ற வேண்டும் என சென்னை நிர்வாகம் முடிவு செய்தது.

Ipl auction 2008

ஆனால் தோனியை எடுக்க வேண்டும் என மும்பையும் போராடியது. பல கட்டங்களை தாண்டி தோனிக்கு சென்னை அணி ஏலத்தொகையாக 11.5 கோடியை நிர்ணயித்தது. அதற்கு மேல் மும்பை அணி தோனியை எடுத்தால் சச்சினுக்கு அந்த தொகையை விட 15 சதவிகிதம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.

ஒரு அணிக்கு ஒதுக்கப்பட்ட 37 கோடியில் 60 சதவிகிதம் இரண்டு வீரர்களுக்கே போய்விட்டால் மற்ற வீரர்களை எடுப்பதில் சிக்கல் ஏற்படும் என கருதி மும்பை அணி தோனியை கைவிட்டது. இந்த வகையில் தோனி சென்னை அணிக்கு கிடைக்க சச்சின் மிகப்பெரிய காரணமானார்.