விளையாட்டு

யார் இந்த வருண் சக்கரவர்த்தி.. நீங்கள் அறிந்திராத சில அறிய தகவல்கள்!

Summary:

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ள சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பற்றிய சில தகவல்கள்.

ஐபிஎல் 2020 தொடரில் மிகவும் பிரபலமான வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது தான் இப்போதைய சூடான செய்தி.

டெல்லிக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் வருண். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த பந்துவீச்சு இதுதான்.

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள வருண் சக்கரவர்த்தி பற்றிய சில தகவல்கள் இதோ:

-1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்த வருண் சக்கரவர்த்தி 13 வயது வரை கிரிக்கெட் அதிகமாக விளையாடியதில்லை.

-கிரிக்கெட்டில் பலமுறை முயன்றும் நல்ல நிலைக்கு உயர முடியாததால் சென்னை எஸ்ஆர்எம் பலல்கலைகழகத்தில் கட்டிடக்கலை பிரிவில் இளங்கலை பட்டம் பயின்றார்.

-அதன்பின் வேலைக்கு சென்ற அவர் அதிகமாக டென்னிஸ் பாலில் கிரிக்கெட் விளையாடி புதிய நுணுக்கங்களை கற்றுகொண்டார்.

-25 வயதில் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட துவங்கினார்.

-2017 ஆம் ஆண்டு TNPL தொடரில் காரைக்குடி காளைஸ் அணிக்காக வருண் விளையாடி அசத்தினார். 

-2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வலை பந்துவீச்சாளராக செயல்பட்டார். அப்போது சுனில் நரைனிடம் ஒரு சில நுணூக்கங்களை கற்றுகொண்டார்.

-2019 ஐபிஎல் தொடரில் 8.4 கோடிக்கு பஞ்சாப் அணியில் தேர்வான இவர் அந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.

-2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தற்போது விளையாடி வரும் இவர் பல முன்னனி சர்வதேச பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழல் பந்துவீச்சாள் திணறடித்து வருகிறார்.


Advertisement