இந்தியா விளையாட்டு

சச்சின் டெண்டுல்கர் இவ்வாறு செய்யலாமா? கடும் கோபத்தில் தமிழக ரசிகர்கள்!

Summary:

tamilnadu cricket fans feel for sachin


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் போட்டி பரபரப்பாக நடைபெற்றது.

அந்த ஆட்டம் மழையால் தடைபடுமோ என்று ரசிகர்கள் மத்தியில் அச்சம் நிலவிய நிலையில் சிறிது நேரம் தடைபட்டாலும் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 337 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாததால் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதனால் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்தநிலையில் கிரிக்கெட் ஜாம்போவான் என்று அழைக்கப்படும் சச்சின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விரேத் கோஹ்லி, குல்தீப், ஹார்திக் பாண்டியா ஆகியோரை டேக் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால் தன்னுடைய முதல் உலகக்கோப்பை போட்டியின், முதல் பந்திலே விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த விஜய்சங்கரைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. பலரும் நீங்கள் விஜய் சங்கரை மறந்துவிட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒரு தமிழக வீரரை சச்சின் பரட்டவில்லையே என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்துடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement