உலக புகழ்பெற்ற, பல சாதனைகளை படைத்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மரணம்!

உலக புகழ்பெற்ற, பல சாதனைகளை படைத்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மரணம்!


Sprint legend Bobby Morrow dies aged 84

அமெரிக்காவின் முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் பாபி மோரோ அவருக்கு 84 வயது ஆனநிலையில் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். பாபி மோரோ1956-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 ஜ் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் அவர் தங்கப்பதக்கத்தை வென்றார். 

ஒரே ஒலிம்பிக்கில் இந்த மூன்று பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்ற 4 வீரர்களில் பாபி மோரோவும் ஒருவர். அமெரிக்காவின் ஜெஸ்ஸி ஓவன்ஸ், கார்ல் லீவிஸ், ஜமைக்காவின் உசேன் போல்ட் ஆகியோரும் இச்சாதனை பட்டியலில் உள்ளனர். 

ஜெஸ்ஸி ஓவன்ஸ் காலமான பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 ஜ் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் சாதனைபடைத்த முதல் மனிதர் பாபி மோரோ என்பது குறிப்பிடத்தக்கது.

1956-ம் ஆண்டில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட பாபி மோரோ தனது காலத்தில் 11 உலக சாதனைகளை படைத்திருந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.