இந்தியா விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? நடக்காதா? தெளிவுபடுத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்!

Summary:

sports minister talk about IPL

கொரோனா வைரஸ் பரவுவதால் நிலைமையை மனதில் கொண்டு, ஏப்ரல் 15க்குப் பிறகு அரசாங்கம் புதிய ஆலோசனைக்கு பின்னரே ஐபிஎல் நடத்தலாமா என்பது தீர்மானிக்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைத்து விளையாட்டுக்கள் மற்றும் பயிற்சி மையங்களை ஏப்ரல் 15 வரை மூடி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

பிசிசிஐ என்பது கிரிக்கெட்டுக்கான ஒரு அமைப்பு, ஆனால் இது குடிமக்களின் பாதுகாப்பு குறித்தது. ஒரு போட்டியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இருப்பார்கள். எனவே இது விளையாட்டு அமைப்புகள் அல்லது விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு பற்றியது மட்டுமல்ல, இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்ககான பாதுகாப்பை பற்றியது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த  விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ஏப்ரல் 15க்கு பின் அரசு புதிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை சூழ்நிலைக்கு ஏற்ப அறிவிக்கும் என தெரிவித்தார்.


 


Advertisement