உலக சாதனையை தகர்த்த உலக சாதனை: இமாலய இலக்கை எட்டி மிரள வைத்த தென்னாப்பிரிக்கா..!!

உலக சாதனையை தகர்த்த உலக சாதனை: இமாலய இலக்கை எட்டி மிரள வைத்த தென்னாப்பிரிக்கா..!!



South Africa set world record by reaching Himalayan target in 2nd T20I against West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இமாலய இலக்கை எட்டி உலக சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்க்கில் தொடரில் முன்னிலை வகித்த நிலையில், இவ்விரு அணிகளுக்கி இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி காட்டியது. பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டி-20  கிரிக்கெட்டில் ஒரு வீரரின் 2 வது அதிவேக சதமாக பதிவானது.

இந்த பட்டியலில், இந்தியாவின் ரோஹித் சர்மா, தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், செக்குடியரசின் விக்ரமசேகரா ஆகியோர் தலா 35 பந்துகளில் சதம் விளாசியதே முதல் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணிக்கு குயின்டான் டி காக்- ரீஜா ஹென்ரிக்ஸ்  ஜோடியினர் பதிலடி கொடுத்தனர். பந்துகள் இடைவிடாது பவுண்டரியை தாண்டி பறந்தது. குறிப்பாக டி காக் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை விழிபிதுங்க வைத்தார். இந்த ஜோடி 6 ஓவர்களில் 102 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து அதிரடிகாட்டிய தென்னாப்பிரிக்க வீரர்கள் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்து இலக்கை எட்டினர். சர்வதேச டி-20 போட்டியில் ஓரு அணியின் அதிகபட்ச சேசிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 515 ரன்கள் எடுத்ததும் சாதனையாக பதிவானது. அவற்றில் 81 பவுண்டரியும், 35 சிக்சரும் அடங்கும்.