விளையாட்டு

கிரிக்கெட் உலகை மாற்ற வருகிறது புது கிரிக்கெட் பந்து. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Summary:

Smart balls in cricket coming soon

கிரிக்கெட் உலகையே திருப்பி போட வருகிறது புது விதமான ஸ்மார்ட் பந்து. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான Kookaburra மைக்ரோ சிப் பொருத்திய புது விதமான ஸ்மார்ட் பந்துகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் சோதனை ஓட்டமாக ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் சில உள்ளூர் T20 போட்டிகளில் இந்த பந்துகள் சோதனைக்கு உள்ளாக உள்ளது.

இந்த சோதனை போட்டிகளில் இந்த பந்துகள் வெற்றிபெற்றால் அடுத்ததாக சர்வதேச போட்டிகளில் இந்த பந்துகளை அறிமுகம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்த பந்துகளில் அதிர்வை தாங்க கூடிய சிப் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த சிப் உள்ள பந்து வீசப்படும் போது பந்தின் வேகம், பந்துவீச்சாளர் கையை விட்டு பந்து வெளியேறும்போது அதன் வேகம், தரையில் பட்டு பவுன் ஆகும்போது அதன் வேகம், பவுன்ஸருக்குப் பின் துடுப்பாட்ட வீரரை நோக்கிச் செல்லும்போது வேகம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிய முடியும்.

மேலும் சந்தேகத்திற்கு உள்ளாகும் சில விக்கெட்டுகளை இந்த பந்துகள் கொண்டு எளிதில் அறிய முடியும். உதாரணமாக, பந்து பேட்டில் பட்டு காலில் பட்டதா? காலில் பட்டு பேட்டில் பட்டதா, பந்து கீழே விழுந்து கேட்ச் செய்யப்பட்டதா? இப்படி பல்வேறு விதமான சந்தேகத்திற்கு உள்ளாகும் விக்கெட்டுகளை இந்த பந்துகள் கொண்டு எளிதில் அறிய முடியும்.


Advertisement