சிஎஸ்கே டீமில் இந்த 3 பேர் ஆடுனா செமயா இருக்கும்.! சிவகார்த்திகேயன் போட்ட அசத்தல் லிஸ்ட்! நடக்குமா??



Sivakarthickeyan wish list in csk team

15 வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. அதற்கு முன்பு ஐபிஎல் அணிகளுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 13 பெங்களூரில் நடைபெற உள்ளது. மேலும் சிஎஸ்கே அணிக்காக எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான அஸ்வின் யூடியூப் சேனலில் சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என பிரபலங்களிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்பொழுது சிவகார்த்திகேயன் பேசியபோது, சிஎஸ்கே அணிக்காக நம்ம ஊர் ஆட்கள் விளையாடினால் மிகவும் நன்றாக இருக்கும். அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்ப வேண்டும்.

csk

மேலும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மற்றொரு தமிழக வீரரான ஷாருக் கான் ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு வர வேண்டும். இந்த மூன்று பேரையும் நான் சிஎஸ்கேவின் மஞ்சள் நிற ஜெர்ஸியில் பார்க்க விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.