விளையாட்டு

வாழ்க்கை எப்படி வேணுமென்றாலும் தலைகீழாக மாறும் என்பதற்கு நேற்றைய போட்டி தான் எடுத்துக்காட்டு.!

Summary:

எவரது வாழ்க்கையும்.. எப்படி வேணுமென்றாலும் மாறும் என்பதற்கு நேற்றைய போட்டிதான் எடுத்துக்காட்டு என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.


ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய தினம் துபாயில் நடைபெற்ற 43வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பத்திலே அதிரடியாக விளையாடியது. 

image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், பைர்ஸ்டோவ்  இருவரும் இணைந்து முதல் 6 ஓவர் வரை பஞ்சாப் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். 7 வது ஓவரின் முதல் பந்து வரை 56 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் கொடுக்காமல் ஆடிக்கொண்டிருந்தது சன்ரைசர்ஸ் அணி.  அப்போது 82 பந்துக்களுக்கு வெறும் 71 ரன்கள் தான் எடுக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது.

அந்த சமயத்தில் எந்த அணியாக இருந்திருந்தாலும் ஆட்டம்  அவ்வுளவுதான் என நினைத்திருப்பார்கள். ஏன் ரசிகர்களுக்கு கூட அந்த எண்ணம் தான் வந்திருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெற்றி 99 சதவீதம் நம்மபக்கம் வந்துவிடும் என நினைத்தார்கள். ஆனால் பஞ்சாப் அணி அடுத்தடுத்து வீசிய ஓவர்களில் ஆட்டத்தினை மொத்தமாக மாற்றியது. ஆனாலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 16 ஓவர்கள் முடிவில் 100 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

24 பந்துக்களுக்கு 27 ரன்கள் எடுக்கவேண்டிய சூழ்நிலையில் வெற்றி யாருக்கு? என இரு அணிகளும் ஏக்கத்துடன் எதிர்பார்த்து விளையாடி வந்தனர். ஆனால் அடுத்த 14 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மொத்த விக்கெட்டுகளும் சரிந்தது. 19.5 ஓவர்கள் முடிவில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது ஹைதராபாத் அணி. நேற்றைய ஆட்டத்தில் கைக்கு வந்த வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். நேற்றைய ஆட்டத்தின் முடிவுக்கு பிறகு பலரும் " எவரதுவாழ்க்கையும்.. எப்படி வேணுமென்றாலும் மாறும் என்பதற்கு நேற்றைய போட்டிதான் எடுத்துக்காட்டு" என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். 


Advertisement