இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.! மீசையை முறுக்கி வெஸ்ட் இண்டீஸ் நோக்கி பயணம்.!

இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.! மீசையை முறுக்கி வெஸ்ட் இண்டீஸ் நோக்கி பயணம்.!


shikhar dhawan new captain in indian team

இந்திய அணி இந்த மாத இதில் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ஜடேஜா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா போன்ற இளம் வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவர் செயல்படுவர். சுழற்பந்து வீச்சுக்கு சஹால், அக்சர் படேலும், வேகப்பந்து வீச்சுக்கு ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷிதீப் சிங், ஷர்துல் தாக்கூரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி விபரம்:

ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான் , பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.