இந்தியா விளையாட்டு

எல்லோரும் சிரிச்சுட்டாங்க!! டாஸ் வின் பண்ணதும் தவான் செஞ்ச காரியம்!! வைரல் வீடியோ..

Summary:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் தவான்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் தவான் செய்த செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது. முன்னதாக நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். தவான் 13 ரன்களில் ஆட்டம் இழக்க, பிரித்வி ஷா 49 ரன்களில் அவுட்டாகி அரைசதத்தை நழுவவிட்டார். இதனை அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 43 . 1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே அடித்தது. 226 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள், 39 வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து, 227 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் தொடரை இந்திய அணி 2 -  1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன், டாஸ் வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், தனது காலில் தட்டி விக்கெட் விழுந்ததுபோல கையை மேலே தூக்கி காட்டினார். இதனால் அருகில் இருந்த இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா மற்றும் மேட்ச் ரெஃப்ரி உள்ளிட்டோர் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement