முதல் போட்டியிலேயே சர்துல் தாகூருக்கு நேர்ந்த சோகம்..!



Sardul-thakur injured

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது.  வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்துள்ளது.

முதல் டெஸ்டில் விளையாடிய முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷர்துல் தாகூர் அணியில் அறிமுகமானார். ஷர்துல் தாகூர் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் களம் இன்று தான் களம் இறங்கினார்.

பல கணவுகளோடு களமிறங்கிய தாகூருக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் அமைந்துவிட்டது. 

உமேஷ் யாதவ் உடன் இணைந்து புதிய பந்தில் பந்து வீசிய தாகூர் முதல் ஒவரில் 1 ரன் விட்டுக்கொடுத்தார். 2-வது ஓவரின் 4-வது பந்தை வீசும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். பிறகு அவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Latest tamil news

அறிமுக டெஸ்டில் வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் சோகத்துடன் வெளியேறியுள்ளார் சர்துல் தாகூர். அவருடைய காயம் தற்போது முன்னேறி வருகிறது எனவும் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து வருகிறார்கள் எனவும் கூறியுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிகிறது.

இதனால் இந்த போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல் போட்டியிலேயே தாகூருக்கு இப்படி ஒரு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.