2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டது ஏன்.? உண்மையை கூறிய சங்ககாரா!sangakkara talk about 2011 world cup final

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள்,  கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் தடை செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதும், அவர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அந்தவகையில், 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்திய அணி வென்று உலகக் கோப்பை வென்ற அந்த ஆட்டத்தில் டாஸ் இருமுறை போடப்பட்டது குறித்து சங்ககாரா கூறியுள்ளார்.

sangakara

இந்திய வீரர் அஸ்வினுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் இலங்கை அணியின் கேப்டனாக அப்போது இருந்த சங்கக்காரா இதற்கான காரணத்தைக் கூறினார். அவர் கூறுகையில், இறுதி ஆட்டத்தில் பூவா, தலையா? கேட்பதற்காக இந்திய கேப்டன் தோனி  நாணயத்தை மேலே சுண்டி விட்டார். ஆனால் ரசிகர்களின் கரவொலியால் நான் என்ன கேட்டேன் என்பது தோனிக்கு சரியாக கேட்வில்லை. 

அப்போது நான் ‘பூ’ என்று சொன்னதாக அவர் கூறினார். ஆனால் நான் ‘தலை’ தான் கேட்டதாக கூறினேன். போட்டி நடுவரும் நான் தான் ‘டாஸ்’ வென்றது போல் கூறினார். ஆனால் தோனி அதை ஏற்கவில்லை. இதனால் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இன்னொரு முறை ‘டாஸ்’ போடலாமே என்று டோனி சொன்னார். அதில் மறுபடியும் நான் கேட்டபடியே ‘தலை’ விழுந்தது என தெரிவித்தார்.