அரசியல் இந்தியா விளையாட்டு

பாஜகவிற்கு மேலும் சேர்ந்தது பெரும் பலம்! இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீராங்கனை இணைந்தார் பாஜகவில்!

Summary:

sainaneval in bjp

ஒலிம்பிக் மற்றும் கமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை பெற்றவர் சாய்னா. பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது திட்டங்களையும் அடிக்கடி பாராட்டி கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். 

இந்நிலையில், சாய்னா நேவால் , தனது சகோதரியுடன் இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சியின் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 

சாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரியை அர்ஜூன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். சாய்னா நேவால் வருகையால் பாஜகவுக்கு கூடுதல் பலம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சாய்னா நேவால் கூறுகையில்,'நான் நாட்டிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளேன். நான் மிகவும் கடின உழைப்பாளி. அதேபோன்ற கடின உழைப்பாளர்களை நான் விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக பலத்திட்டங்களை கொண்டுவருவதை என்னால் பார்க்க முடிகிறது.  எனவே அவருடன் இணைந்து நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என சாய்னா நேவால் தெரிவித்தார். 


Advertisement