இந்தியா விளையாட்டு

உள்ளாடையில் டிஷ்யூ பேப்பர் வைத்து விளையாடிய சச்சின்! சச்சினின் ஓப்பன் டாக்!

Summary:

sachin talk about his old match

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போது உள்ளாடையில் டிஷ்யூ பேப்பரை வைத்து விளையாடியதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய கிரிக்கெட் ஜம்போவான் சச்சின், கடந்த 2003ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாடியதை என்னால் மறக்கவே முடியாது என கூறினார்.

அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் என்னால் நிற்ககூட முடியவில்லை, மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் விளையாடினேன். ஒருகட்டத்தில் என்னால் சமாளிக்க முடியாத நிலையில் உப்பு நீரை குடித்து விளையாடினேன்.

இதேபோன்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் கடுமையான வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டேன். அந்த சமயத்தில் உள்ளாடையில் டிஷ்யூ பேப்பர்களை வைத்துக் கொண்டு களமிறங்கி விளையாடினேன். இதனால் மிகவும் கஷ்டப்பட்டாலும் நாட்டுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன் என கூறினார்.
 


Advertisement