
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு அதிகமாகவே இருந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ரூ. 14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லும், ரிச்சர்ட்ஸன் ரூ.14 கோடிக்கும் ஏலத்தில் எடுக்ககப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் தொடர் அறிமுகமான போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். சச்சின் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில், தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இவர் பெயர் இடம்பெற்றது பெரிய அளவில் சர்ச்சையானது. முதலில் வீரர்களை பெயரை சொல்லும் போது அர்ஜுன் பெயரை குறிப்பிடவில்லை. லிஸ்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவர் பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து இவர் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. கடைசி வீரராக இவர் ஏலம் விடப்பட்டார். அதில் மும்பை அணி இவரை எடுத்தது.
Advertisement
Advertisement