விளையாட்டு

மைதான பணியாளராக மாறிய சச்சின் மகன் - தந்தை தலைவன், மகன் பணியாளன்!

Summary:

Sachin son worked as stadium labor at london

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டி20 போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில்  இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாளிலும் மழை பெய்த போது, சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மைதான பணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்தது பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நேற்று 2ம் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. சிறிது நேரம் விளையாடிய நிலையில் மீண்டும் மழை குறிக்கிட்டது. அப்போது மைதான பராமரிப்பாளர்களுடன் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுலகர் மைதானத்தை மூடும் பணியில் ஈடுபட்டார். 


லாட்ஸ் மைதானத்தில் ஒவ்வொரு போட்டி தொடங்குவதற்கும் முன் அங்குள்ள மணி அடித்து தொடங்குவது வழக்கம். அதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அழைக்கப்படுவார்கள். 2வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன் மணி அடித்து தொடங்கி வைக்கும் பெருமையை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் மழை காரணமாக முதல் நாள் மணி அடித்து வைத்து தொடங்கி வைக்க முடியவில்லை.


இப்படி தந்தை கெளரவப்படுத்த அழைக்கப்பட்டாலும், தன் மகனை கிரிக்கெட் பணி செய்ய அனுமதித்தது சச்சினின் பெருந்தன்மையையே காட்டுகிறது. இதுமட்டுமல்லாமல், இந்திய வீரர்களுக்கு வலைப்பயிற்சியின் போது பந்துவீசவும் செய்தார் சச்சின் மகன்.


Advertisement