விளையாட்டு

கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சினின் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா.. வைரலாகும் புகைப்படம்!

வரும் 19 ஆம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் 2020 தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த 14 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ராகுல் சாகர் சக வீரர்களுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் போல்ட், திவாரி, பேட்டின்சன் மற்றும் சிலர் உள்ளனர்.

இந்த புகைப்படத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இடம்பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதிகாரப்பூர்வமாக அவர் மும்பை அணியில் தேர்வாகவில்லை. மாறாக தற்போது வலை பந்துவீச்சாளராக மும்பை அணியில் இடம்பெற்றிருக்கலாம் என தோன்றுகிறது.

20 வயது நிரம்பிய அர்ஜூன் டெண்டுல்கர் U19 இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால் முதல்தர போட்டிகளில் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிரிக்கெட் ஜாம்பாவானின் மகன் வெறும் வலை பந்துவீச்சாளராக சென்றிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Advertisement