விளையாட்டு

கோலியை எச்சரிக்கும் சச்சின்! அந்த இடத்திற்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார்!

Summary:

Sachin advice to virat kholi for position 4

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவோடு இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் படு தோல்வி அடைந்தது.

இந்நிலையில் வரும் ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணி தென்னாபிரிக்க அணியுடன் மோதுகிறது. இந்திய அணி இந்த முறை கோப்பையை வென்றுவிடும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் அணியில் நான்காவது வீரராக யாரை களமிறங்குவது என கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த கிரிக்கெட் சாம்பவான் சச்சின் கூறுகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு அனுபவ வீரர். அவர் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று வெல்ல கூடிய திறன் படைத்தவர். ஆகவே தோனி 5வது  வீரராக களமிறங்குவதே சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பாண்டியாவை 6 வதாக களமிறக்கினால் இறுதியில் தோணி, பாண்டியா இருவரும் அதிரடியாக விளையாட வாய்ப்புள்ளது. எனவே நான்காவது இடத்தில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் ஆகியோரில் யாரவது ஒருவரை நான்காவதாக களமிறக்கலாம் என சச்சின் தெரிவித்துள்ளார்.


Advertisement