விளையாட்டு

2016 முதல் 2020 வரை.. தோனியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மெய்சிலிர்க்கும் இளம் வீரர்!

Summary:

2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஐபிஎல் தொடர் வரை என தோனியுடனான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் சூப்பர் ஹீரோ ருதுராஜ் கெய்க்வாட்.

2020 ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு இன்னல்களை சந்தித்தது. முன்னணி வீரர்கள் விலகல், கொரோனா தோற்று என சுழற்றி அடித்தது. அதன் விளைவாக சென்னை அணி முதல் முறையாக பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

இதில் ஆரம்பத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர் சென்னை அணியில் முதல்முறையாக இடம்பிடித்த ருதுராஜ் கெய்க்வாட். ஆரம்பத்தில் சொதப்பினாலும் கடைசி 3 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணிக்கு பெருமை சேர்த்து கொடுத்தார் ருதுராஜ் கெய்க்வாட்.

How MS Dhoni wasted Ruturaj Gaikwad

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உடனான  அனுபம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் 2016 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை தொடரின் போது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காயம் ஏற்பட்டது. அப்போது ஜார்கண்ட் அணியின் ஆலோசகராக இருந்த தோனி அவரது உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார்.

அதன் பின்னர் 2020 ஆண்டில் மனம் சோர்ந்து இருந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையை குறித்து விசாரித்தார். தோனியுடன் விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறியுள்ளது எனவும் பூரிப்புடன் கூறியுள்ளார்.


Advertisement