விளையாட்டு

தள்ளிப்போ.... கிட்ட வந்து உரசாதே.! மைதானத்தில் மோசமாக நடந்துகொண்ட ருதுராஜ் கெய்க்வாட்.! வைரல் வீடியோ

Summary:

தள்ளிப்போ.... கிட்ட வந்து உரசாதே.! மைதானத்தில் மோசமாக நடந்துகொண்ட ருதுராஜ் கெய்க்வாட்.! வைரல் வீடியோ

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி  5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல் 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும், கடைசி 2போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று இந்த தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 3.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆட்டம் ஆரம்பிக்கும்போது மழை குறுக்கிட்டபோது இந்திய அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அமர்ந்திருந்தபோது அவரது அருகில் வந்து அமர்ந்து மைதான ஊழியர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால், தன்னை உரசி அமர்ந்த அந்த ஊழியரை தள்ளிப்போ என்று கூறி கையால் தள்ளிய கெய்க்வாட், வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த ஊழியர் மீண்டும் செல்பி எடுக்க முயற்சி செய்தபோது, கெய்க்வாட் அவரை கண்டுகொள்ளவே இல்லை. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பலரும் கெய்க்வாட்டின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement