400 கிலோ எடை தூக்கும் போட்டி..! இறுதியில் தடுமாறிய வீரரின் கால்கள்..! அதன்பின் நேர்ந்த சோகம்.? வைரல் வீடியோ.!

400 கிலோ எடை தூக்கும் போட்டி..! இறுதியில் தடுமாறிய வீரரின் கால்கள்..! அதன்பின் நேர்ந்த சோகம்.? வைரல் வீடியோ.!


Russian Powerlifter Alexander Sedykh Fractures Both Knees After Attempt at 400kg Squat Goes Wrong

400 கிலோ எடைகொண்ட பளுவை தூக்கியபோது வீரரின் முழங்கால் சவ்வு கிழிந்து வலியால் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.

ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் செடிக் என்ற பளுதூக்கும் வீரர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டியில் 400 கிலோ எடைகொண்ட பளுதூக்கும் பிரிவில் கலந்துகொண்டார். அப்போது 400 கிலோ எடைகொண்ட பளுவை தூக்கியபோது நிலைதடுமாறி அலெக்ஸ்சாண்டர் செடிக் கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் அலெக்ஸ்சாண்டர் செடிக்வின் இரண்டு கால்களிலும் முழங்கால் முறிந்து சவ்வு கிழிந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் அலெக்ஸ்சாண்டர் செடிக் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஓய்வு எடுக்கவேண்டும் எனவும், மீண்டும் நடக்கும்போது அவர் கால்களை வேகமாக அசைக்காமல் மெதுவாகவே நடக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அவர் இனி பளுத்தூக்க முடியுமா என்பது இரண்டு மாத சிகிச்சை முடிந்த பின்னரே தெரியவரும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் போட்டியில் பங்கேற்று அலெக்ஸ்சாண்டர் செடிக்வின் கால்கள் முறிந்து அவர் வலியால் அலறும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.