சோதனை மேல் சோதனை.! நம்ம கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..! வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!

சோதனை மேல் சோதனை.! நம்ம கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..! வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!


rohith sharma practice video

இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்தநிலையில் இந்த போட்டியின் போது  இந்திய வீரர்கள் மைதானத்தில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டனர்.  அப்போது ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது திடீரென காற்றில் ரோஹித் சர்மா அணிந்திருந்த தொப்பி பறந்து சென்றது. அதனை பின்னால் வந்த வீரர் ஒருவர் எடுத்துக் கொடுக்க சிரித்துக் கொண்டே மீண்டும் மாட்டிக் கொண்டார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொப்பி பறந்து போனது. இந்த வீடியோவை பதிவு செய்த ரசிகர்கள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலைமையா என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.