இந்தியா விளையாட்டு

நாளைய போட்டியில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி, புதிய சாதனையை படைப்பாரா ரோஹித் சர்மா?

Summary:

rohit will beat virat record


வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, டெல்லியில் நாளை நடக்கிறது. இதனையடுத்து இரண்டு அணியின் வீரர்களும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நாளை நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முதலிடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் விராட் கோலி. விராட் இதுவரை 67 போட்டிகளில் ஆடி 2450 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

rohit sharma க்கான பட முடிவு

ரோஹித் சர்மா இதுவரை ஆடிய 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தநிலையில் இந்திய - வங்கதேச அணிக்கு இடையே நாளை நடக்கும் போட்டியில் ரோஹித் சர்மா 7 ரன்கள் எடுத்தால்,டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார் ரோஹித் சர்மா.


 


Advertisement