விளையாட்டு

அனைவருக்கும் நன்றி.. இந்தியாவிற்காக தொடர்ந்து போராடுவேன்.. ரோகித் சர்மா வீடியோ பதிவு!

Summary:

Rohit sharma thanks to the fans for wishing

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வீரர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரோகித் சர்மா. சமீபத்தில் இவர் இந்திய அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார்.

ரோகித் சர்மாவின் திறமையை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசால் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அவருக்கு இந்த வருடம் வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து பலரும் ரோகித் சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ரோகித் சர்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. இவை அனைத்திற்கும் ரசிகர்களின் மேலான ஆதரவு தான் காரணம். இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல பெருமைகளை தேடி தருவேன்" என கூறியுள்ளார்.


Advertisement