இந்தியா விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசுரவேகத்தில் முன்னேறிய ரோஹித்! டாப் 10 ல் நான்கு இந்திய வீரர்கள்!

Summary:

Rohit sharma improved icc test batsman list


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோஹித் ஷர்மா, தரவரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரோஹித் ஷர்மா முதல் முறையாக துவக்க வீரராக களமிறங்கினார். மேலும் முதல் இன்னிங்சில் 176 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சிலும் 127 எடுத்தார். அதன் பின்னர் ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்டில் முதல் இரட்டை சதத்தை (212) ரன்களை அடித்து அசத்தினார்.

இந்தநிலையில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி அபாரமாக வென்று அசத்தியது. ரோஹித் ஷர்மா 529 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதை பெற்றார். இந்த தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார். 

ஏற்கனவே விராட் கோலி 2-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ரஹானே 5-வது இடத்திலும் உள்ளனர். தற்போது ரோகித் சர்மாவும் 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார். இந்தநிலையில் இந்திய அணியில் நான்கு வீரர்கள் டாப் 10-க்குள் உள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்:
1.ஸ்டீவ் ஸ்மித்
2.விராட் கோஹ்லி
3.கேன் வில்லியம்சன்
4.புஜாரா
5.ரஹானே
6.ஹென்றி நிக்கோலஸ்
7.ஜோ ரூட்
8.டாம் லாதம்
9.திமுத் கருணரத்னே
10.ரோஹித் ஷர்மா

 


Advertisement