இது செம பிளானா இருக்கே!! சிஎஸ்கே வை வீழ்த்த டெல்லி அணியின் புது கேப்டன் போடும் திட்டத்தை பாருங்க!!Rishap pant speaks about first match against to csk

ஒரு கேப்டனாகா முதல் முறையாக சென்னை அணியை எதிர்த்து விளையாட போவது குறித்து பேசியுள்ளார் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்.

ஐபில் T20 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்மை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் மோதுகிறது. கடந்த சில சீசன்களாக டெல்லி அணியை வழிநடத்திவந்த அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐய்யர் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து எதிரான போட்டியில் விளையாடியபோது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபில் தொடரில் இருந்து வெளியேறினார்.

dhoni

இதனால் டெல்லி அணியின் கேப்டனாக தற்போது ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக கேப்டன் பதவி ஏற்கும் ரிஷப் பண்ட், தனது முதல் போட்டியிலையே சென்னை அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிராக டெல்லி அணியின் கேப்டனாக தனது செயல்பாடு குறித்து பேசிய ரிஷப் பண்ட், "நான் கேப்டனாக ஆடும் முதல் போட்டி தோனி பாய் அணிக்கு எதிரானது ஆகும். அவரிடம் இருந்து, நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். அதேபோல் என்னுடைய தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கையிலும் சில அனுபவங்களை பெற்றுள்ளேன்.

ஐபில் போட்டியில் விளையாடும்போது, தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது மற்றும் எனது தனிப்பட்ட அனுபவத்தையும் இணைத்து, சென்னை அணிக்கு எதிராக பயன்படுத்தி போராடுவேன்" என தெரிவித்துள்ளார்.