தாறுமாறு சாதனை...!! 24 வயதில் தோனியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ரிஷப் பண்ட்.!!

தாறுமாறு சாதனை...!! 24 வயதில் தோனியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ரிஷப் பண்ட்.!!


rishap-pant-beat-ms-dhoni-reord

தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 26 ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற  இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ்சை ஆடிய இந்திய அணி 130 ரங்களுடன் வலுவான முன்னிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் 4 வீரர்களை கேட்ச் செய்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 93 கேட்ச், 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 

Rishap Pant

சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ள வீரர்களின் பட்டியலில் தோனி மூன்றாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 90 டெஸ்ட்களில் விளையாடி 294 முறை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்துள்ளார். மேலும் அதிவேகமாக 100 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்துள்ள இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்று இருந்தார்.

தற்போது தோனியின் இந்த சாதனையை ரிஷப் பண்ட் தகர்த்துள்ளார். 24 வயதான ரிஷப் பண்ட், தனது 26 வது டெஸ்ட் போட்டியிலேயே "கீப்பிங்கில் 100 அவுட்" என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு தோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே இந்திய விக்கெட் கீப்பரின் அதிவேகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.