சூரியகுமார் யாதவை இந்திய அணியில் சேர்க்காததற்கான காரணம் என்ன.. ரவி சாஸ்திரி விளக்கம்!

சூரியகுமார் யாதவை இந்திய அணியில் சேர்க்காததற்கான காரணம் என்ன.. ரவி சாஸ்திரி விளக்கம்!


ravi sasthri open up about the absence of suryakumar yadav in indian team

ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்கள் பட்டியலில் சூரியகுமார் யாதவின் பெயர் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் இடம்பெறாததால் பல விமர்சனங்கள் எழுந்தன. 

suryakumar yadav

உள்நாட்டு மற்றும் கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் சூரியகுமார் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "இந்திய அணி ஏற்கனவே பல திறமையான வீரர்களுடன் சமநிலையில் உள்ளது. இதனால் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அவரை போன்ற இளம் வீரர்களுக்கு நிச்சயம் எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பினை அவர்கள் இறுக பிடித்துக்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.