விளையாட்டு

கடைசி வரை பரபரப்பு..! டெல்லி அணிக்கு ஷாக் கொடுத்த மோரிஸ்.! யாருமே எதிர்பார்க்கவில்லை.!

Summary:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், 7-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் சஞ்சு சாம்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், 7-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் உனத்கட் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியின் 3 துவக்க விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் நிதானமாக ஆடி 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக ஆடி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 3 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் இருந்தது. 20 வது ஓவரின் நான்காவது பந்தில் கிறிஸ் மோரிஸ் சிக்ஸர் அடித்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 19.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. 


Advertisement