விளையாட்டு

"கேப்டனுக்கெல்லாம் கேப்டன் அவர்" - தோனிக்கு புகழாரம் சூட்டிய சுரேஷ் ரெய்னா!

Summary:

Raina talks about dhoni as Captian of captains

இந்திய அணியின் முன்னாள் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தோனியை புகழ்ந்து பேசுகையில், "தோனி கேப்டனுக்கெல்லாம் கேப்டன்" என கூறியுள்ளார். 

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியபோதும் அவருக்கு மிகவும் நெருங்கமாக நீண்ட நாட்களாக பயணம் செய்தவர் சுரேஷ் ரெய்னா.  இடதுகை பேட்ஸ்மேனான ரெய்னா இந்தியா 2011 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை கைப்பற்றியபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். 

இந்நிலையில் தற்போது நெதர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ள சுரேஷ் ரெய்னா தோனியை குறித்து பேசுகையில், "2017 ஆம் ஆண்டிலேயே தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பிலிருந்து  விலகினாலும், ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து வேலை செய்யும் அவரது மூளை இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது என கேப்டன் கோலியே பல முறை தெரிவித்துள்ளார். 

பேப்பரில் தான் தோனி கேப்டனாக இல்லை. ஆனால் உண்மையாகவே கோலிக்கு கேப்டனாக தோனி தான் செயல்படுகிறார் என நான் கருதுகிறேன். பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை கூறுவதும், பீல்டர்களை நிறுத்துவது என களத்தில் தோனி இன்னும் கேப்டனுக்கான பணிகளை செய்துகொண்டுதான் உள்ளார். 

தோனி உண்மையில் கேப்டனுக்கெல்லாம் கேப்டன். தோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருப்பதால் கோலி மிகவும் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். இதனை கோலியே பலமுறை ஒப்புக்கொண்டுள்ளார்" என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 


Advertisement