விளையாட்டு

மீண்டும் புதுபொலிவுடன் களமிறங்குவேன் - அறுவை சிகிச்சைக்கு பிறகு ரெய்னா நம்பிக்கை!

Summary:

Raina hopes to be alright soon

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவிற்கு முழங்காலில் ஏற்பட்ட வலியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நீண்டநாட்களாக மூட்டு பிரச்னையால் ரெய்னா அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆம்ஸ்டர்டமில் ரெய்னா ஆப்ரேஷன் செய்து கொண்டார். இந்த காயத்தில் இருந்து மீண்டு வர ரெய்னாவுக்கு 4 வாரம் முதல் 6 வாரம் வரை தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுரேஷ் ரெய்னா தான் நல்ல முறையில் குணமாகி வருவதாகவும் மீண்டும் முழு பலத்துடன் களத்தில் விரைவில் விளையாடுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது ரெய்னாவிற்கு இரண்டாவது மூட்டு அறுவை சிகிச்சை ஆகும். ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

மேலும் தான் சிரமப்பட்ட காலக்கட்டத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். விரைவில் குணமாகி மீண்டும் களத்தில் தனது திறமையை நிரூபிப்பேன் என ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Advertisement