சர்வ சாதாரணமா இரட்டை சதங்களை அடித்து குவிக்கும் ராகுல் டிராவிட்டின் மகன் சமித்.! குவியும் வாழ்த்துக்கள்.!

Rahul dravid son hitting double century


rahul-dravid-son-hitting-double-century

14 வயதுக்கு உட்பட்டோருக்கான மண்டல போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் ராகுல் ட்ராவிடின் மகன் 2 மாதத்தில் 2 இரட்டை சதம் அடித்து அசத்தி அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த பி.டி.ஆர். ஷீல்டு கிரிக்கெட் தொடரில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மண்டல போட்டியில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் ட்ராவிடின் மகன் சமித் 146 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் மொத்தம் 204 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். சமித்தின் இந்த ஆட்டத்தால் அவரது அணி 3 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் (50 ஓவர்) அடித்தது.

cricket

இதனை அடுத்து ஆடிய ஸ்ரீகுமரன் அகாடமி அணி 110 ரன்னில் அணைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் சமித் அணி 267 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 14 வயதினருக்கு மண்டல அளவிலான போட்டியிலும் ராகுல் ட்ராவிடின் மகன் சமித் 201 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என ராகுல் ட்ராவிடின் ரசிகர்கள் அவரது மகன் சமித்தை புகழ்ந்துவருகின்றனர்.