ஐபிஎல்-ல் தோனியிடம் கற்று கொண்ட பாடம்..! இந்தியாவுக்கு எதிரான தொடரில் வச்சு செய்ய காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்.!

ஐபிஎல்-ல் தோனியிடம் கற்று கொண்ட பாடம்..! இந்தியாவுக்கு எதிரான தொடரில் வச்சு செய்ய காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்.!


pretorious talk about ms dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியிடம் கற்று கொண்ட பாடம், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை என்று தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் தெரிவித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, நாளை வியாழக்கிழமை நடக்க உள்ளது. இதற்காக தென் ஆப்பிரிக்க அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ், முதல் டி20 போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தோனி குறித்து பேசிய பிரிட்டோரியஸ், தோனி எப்போதுமே அவரை நம்புவார். அனைத்துமே எந்த சூழ்நிலையிலும் சத்தியம் என்றுதான் அவர் இருப்பார்.

pretorious

மூன்று பந்துகளில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், பந்துவீச்சாளராக கூட நீங்கள் தோற்கலாம். ஆனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு அப்போதும் வாய்ப்பு இருக்கும் என நம்புபவர் தான் தோனி. அதற்காக பதற்றம் அடையவும் மாட்டார், அனைத்தையும் அவர் தலையில் சுமத்திக் கொள்ளவும் மாட்டார். அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், களத்தில் எப்படி அமைதியாக செயல்படுகிறார் என்பதைத் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் நிச்சயம் எனக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் கைகொடுக்கும் என தெரிவித்துள்ளார்.