விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தில் பொல்லார்ட் செய்த காரியத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்! வீடியோ!

Summary:

Pollard jumped out of ground to stop the ball video

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 51 போட்டிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை, டெல்லி, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. நான்காவது இடத்தை பிடிக்கும் முனைப்பில் கைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றது.

இந்நிலையில் நேற்று மும்பை, கைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன் எடுத்தது. 163 என்ற இலக்குடன் களமிறங்கிய கைதராபாத் அணி 162 ரன் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி வீசிய நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தை சாகா பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார். பவுண்டரியை தடுப்பதற்காக பந்து பின்னால் ஓடிய பொல்லார்ட் பந்தினை தனது காலால் தட்டிவிட்டு எல்லைக்கோட்டுக்கு அடுத்து இருந்து விளம்பர பலகையையும் தாண்டி கீழே விழுந்தார்.

தனது அணிக்காகவும், ஒரு பவுண்டரியை தடுக்க பொல்லார்ட் எடுத்த இந்த அதிரடி முடிவாலும் மும்பை அணி வீரர்கள் உட்பட ரசிகர்களும் பிரமித்து போய் நின்றனர்.


Advertisement