விளையாட்டு

இந்திய அணியின் பிரபல விக்கெட் கீப்பருக்கு 9 விரல்கள்தான் உள்ளதாம்.! பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்.!

Summary:

Parthiv Patel reveals how he lost a finger

இந்திய அணியின் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேலுக்கு அவரது கைகளில் 9 விரல்கள்தான் உள்ளது என்ற ரகசியம் பலவருடங்களுக்கு பிறகு வெளியே வந்துள்ளது.

இந்திய அணியின் அதிரடி வீரர் மற்றும் விக்கெட் கீப்பரானா 35 வயதாகும் பார்த்திவ் படேல் இந்திய அணியில் கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளிலும், 38 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் பல்வேறு உள்ளூர் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார் பார்த்திவ் படேல்.

இவரது தலைமையில் குஜராத் அணி 2016-17ல் ரஞ்சி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையியல், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக விளையாடியுள்ள இவருக்கு கையில் 9 விரல்கள் மட்டும்தான் உள்ளதாம். 6 வயதில் வீட்டில் கதவு இடுக்கு இடையே சுண்டுவிரல் சிக்கி துண்டாகியுள்ளது.

இதுபற்றி தற்போது கூறியுள்ள பார்த்திவ் படேல், இதற்காக நான் ஒருபோதும் வருத்தப்பட்டது இல்லை. விக்கெட் கீப்பிங் பணி செய்யும் போது தான் சற்று கடினமாக இருக்கும். கிளவுசில் சிறியதாக உள்ள சுண்டு விரல் உள்ளே நுழையாது. இதனால் சுண்டுவிரலை டேப் வைத்து ஒட்டிக்கொள்வேன் என கூறியுள்ளார்.

இத்தனை வருடங்களாக 9 விரல்களுடன் உலகத்தரவரிசை போட்டிகளில் பார்திவ் படேல் விளையாடிவந்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement