"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
மைதானத்தில் திடீரென சரக்கு பாட்டிலை எடுத்து ரவிசாஸ்திரியிடம் கொடுத்த ரிஷப் பண்ட்.! திகைத்துப்போன ரவிசாஸ்திரி.! வைரல் வீடியோ
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்தநிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தநிலையில் தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை முறியடித்து அபார வெற்றி பெற்றது.
இதனால் இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Pant offering his champagne to Ravi Shastri#INDvENG #OldTrafford #Pant #TeamIndia pic.twitter.com/n9HguNNuID
— Tejesh R. Salian (@tejrsalian) July 17, 2022
ஆட்டநாயகன் விருதை பெற்ற பண்ட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியிடம் வந்தார். அப்போது ரவி சாஸ்திரி நேரலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பண்ட் அவரை அழைத்து, தான் வைத்திருந்த மது பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடி சென்றார். இதனால் ரவி சாஸ்திரி சற்று திகைத்து போனார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.