போட்டியின்போது தலையில் அடித்துக்கொண்ட அஸ்வின்.. லட்டுபோல் வந்த வாய்ப்பு.. கோட்டைவிட்ட பண்ட்.. வைரல் வீடியோ..



pant-missed-easy-stump-chance-viral-video

இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் மிக எளிமையான விக்கெட்டை எடுக்க தவறிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று காலை இங்கிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது இங்கிலாந்து அணி வீரர் ஜேக் லீச் அஸ்வின் வீசிய பந்தை எதிர்கொண்டபோது கிரீஸை விட்டு வெளியே வந்து பந்தை அடிக்க முயன்றார். அப்போது பந்து அவரைத் தாண்டி, கீப்பர் ரிஷப் பண்ட் கையை நோக்கிச் சென்றது.

மிக எளிமையாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல், பண்ட் அந்த பந்தைத் தவற விட்டார். இதனை பார்த்து கடுப்பான அஸ்வின் தனது கையால் தலையில் அடித்துக்கொண்டார். இந்த காட்சி தற்போது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒருபுறம் இந்திய அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் பண்ட், கீப்பிங்கில் தொடர்ந்து சொதப்பிவருவது இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.